/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் பார்வையாளர்களிடம் புகாரை நேரில் தெரிவிக்க யோசனை
/
தேர்தல் பார்வையாளர்களிடம் புகாரை நேரில் தெரிவிக்க யோசனை
தேர்தல் பார்வையாளர்களிடம் புகாரை நேரில் தெரிவிக்க யோசனை
தேர்தல் பார்வையாளர்களிடம் புகாரை நேரில் தெரிவிக்க யோசனை
ADDED : மார் 28, 2024 07:08 AM
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதியில், அச்சமின்றி ஓட்டுப்பதிவு செய்வதை உறுதி செய்யவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம், பார்வையாளர்களை நியமித்துள்ளது.
இதன்படி, தேர்தல் பார்வையாளர் (காவல்) ராம் கிருஷ்ண ஸ்வர்ன்கர், (பொது) ராஜீவ் ரஞ்சன் மீனா ஆகியோரை நியமித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்த புகார்களை பொது பார்வையாளரிடம், 7418140422 என்ற எண்ணிலும், காவல் பார்வையாளரிடம், 9361536138 என்ற எண்ணிலும், செலவின பார்வையாளர் லட்சுமிநாராயணாவிடம், 81225 90422 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.பொதுமக்கள், வேட்பாளர்கள் போன்றோர், தேர்தல் பார்வையாளர்களை தினமும் மதியம், 12:00 முதல், 1:00 மணி வரை ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள காளிங்கராயன் பயணியர் மாளிகை அறை 'சி-1'ல் பொது பார்வையாளரையும், 'கே-1' ல் காவல் பார்வையாளரையும், 'சி-3' ல் செலவின பார்வையாளரையும் சந்தித்து புகாரை நேரில் தெரிவிக்கலாம்.

