தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மானியத்துடன் முயல் வளர்க்க யோசனை

மானியத்துடன் முயல் வளர்க்க யோசனை

மானியத்துடன் முயல் வளர்க்க யோசனை


ADDED : நவ 14, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாய தொழிலாளர் மத்தியில் முயல் வளர்ப்பை ஊக்குவிக்க, 50 சதவீத மானியத்துடன் புறக்கடை முயல் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பஞ்.,க்கள், 2ம் நிலை டவுன் பஞ்.,களில், 15 தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். பதிவு செய்யப்பட்ட மகளிர் குழுவினருக்கு முன்னுரிமை தரப்படும்.கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஈடுபாடுடைய சிறு, குறு விவசாயிகள் பயன் பெறலாம். பயனாளிகள் பங்கு தொகையாக, 30,000 ரூபாய் முதலீடு செய்தல், பண்ணை அமைக்க இடவசதி உடையவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். தலா, 8 பெண், 2 ஆண் முயல்கள் வழங்கப்படும். திட்டம் செயல்படுத்தப்பட்டதும், 30,000 ரூபாய் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளோர், கால்நடை பராமரிப்பு துறையின் பிரத்யேக இணையம் அல்லது அருகிலுள்ள அரசு கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us