/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நில வழிகாட்டி மதிப்பு உயர்வை குறைக்க வலியுறுத்தி கடிதம் அனுப்பும் போராட்டம்
/
நில வழிகாட்டி மதிப்பு உயர்வை குறைக்க வலியுறுத்தி கடிதம் அனுப்பும் போராட்டம்
நில வழிகாட்டி மதிப்பு உயர்வை குறைக்க வலியுறுத்தி கடிதம் அனுப்பும் போராட்டம்
நில வழிகாட்டி மதிப்பு உயர்வை குறைக்க வலியுறுத்தி கடிதம் அனுப்பும் போராட்டம்
ADDED : மே 30, 2024 07:04 AM
ஈரோடு : நில வழிகாட்டி மதிப்பு உயர்வை குறைக்கக்கோரி, தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், நில முகவர்கள் சார்பில் கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு தற்போது நிலத்துக்கான அரசு வழிகாட்டி மதிப்பு, 70 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மார்க்கெட் விலையை அறிந்து, அதற்கேற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்துவதற்கு தற்போது சர்வே எடுத்து வருகிறது. ஏற்கனவே முத்திரை தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் உயர்ந்துள்ளது. தமிழக அரசு கொண்டு வரும், 70 சதவீத அரசு வழிகாட்டி மதிப்பின் உயர்வால், 10 ஆண்டுகளுக்கு நிலங்கள், வீடு போன்றவை விற்பனையும், கட்டுமானமும், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கும் என கருதுகின்றனர்.வழிகாட்டி மதிப்பீடு உயர்வால் வீடு, நிலம் வாங்குவோர், விற்போர், நில விற்பனை முகவர்கள், தரகர்கள் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும் என கூறுகின்றனர். எனவே இந்த அறிவிப்பை திரும்ப பெற்று, அரசு கொண்டு வரும் வழிகாட்டி மதிப்பு உயர்வை, 5 முதல், 10 சதவீதம் மட்டும் உயர்த்த வேண்டும். அல்லது அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என, பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று, ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் இருந்து, ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் செல்வமணி தலைமையில், தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், முருகேசன் பர்வேஸ், வைதேகி உட்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.