/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'இன்ஸ்டா'வில் தொடங்கி கர்ப்பத்தில் முடிந்த காதல் திருமணத்துக்கு நாள் குறித்து ஓட்டம் பிடித்த காதலன்

ADDED : ஜூலை 03, 2024 02:49 AM
பெருந்துறை:ஈரோடு,
கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர், 19 வயது இளம்பெண், ஈரோட்டில் ஒரு
கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில்
பாட்டு பாடியும், நடனமாடியும், சினிமா வசனஙகளை பேசியும் மீம்ஸ்களை
போட்டு வந்தார். புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த முகமது
ஹர்சத், 25, லைக்ஸ், கமெண்ட் கொடுக்க, நாளடைவில் இருவரும் போன் எண்களை
பரிமறிக் கொண்டு நட்பாக பல மணி நேரம் பேசி காதலிக்க தொடங்கினர்.
இந்நிலையில்
கல்லுாரி மாணவியை பார்க்க பெருந்துறைக்கு வந்த ஹர்சத்,
பெருந்துறையில் ஒரு விடுதியில் தங்கியுள்ளார். அங்கு மாணவியும்
சென்ற நிலையில், தனிமையில் இருந்தனர். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார்.
மூன்று
மாதமான நிலையில் இரு வீட்டாருக்கும் விஷயம் தெரிந்தது. இருவரும் ஒரே
தரப்பை சேர்ந்தவர்கள். ஆனால், ஹர்சத் நன்கு வசதியானவர் என்பதால்,
முதலில் அவரது வீட்டார் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு
இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி, திருமணம் செய்து வைக்க
முடிவு செய்தனர்.
இதுகுறித்து பத்திரிக்கையும்
அச்சிடப்பட்டது. ஜூலை முதல் வாரத்தில் திருமணம் நடப்பதாக இருந்த
நிலையில், பெற்றோருடன் முகமது ஹர்சத் மாயமாகி விட்டார். இதனால்
அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார், பெருந்துறை போலீசில் புகார்
செய்துள்ளனர்.
போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.