/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கார் கண்ணாடியை உடைத்து மொபைல் திருடியவர் கைது
/
கார் கண்ணாடியை உடைத்து மொபைல் திருடியவர் கைது
ADDED : செப் 30, 2024 06:51 AM
புன்செய் புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி அருகே நல்லுாரில் ரோட்டரி சங்க கட்டடம் உள்ளது. இங்கு, நேற்று காலை முதல் தன்னார்வ அமைப்புகள் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மருத்துவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனம், கார்களில் வந்திருந்தனர்.
இந்நிலையில், வளாகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஒரு காரின் பக்கவாட்டு கண்ணாடியை மர்ம நபர் ஒருவர் உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த பேக் மற்றும் மொபைல்போனை திருடி சென்றுள்ளார். புன்செய் புளியம்பட்டி போலீசார், அங்கு பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, 25 வயதுள்ள ஒரு வாலிபர் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பேக், மொபைல்போன் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்ததை கண்டறிந்தனர். புன்செய் புளியம்பட்டி அடுத்த புதுப்பாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 24, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததால், அவரை போலீசார் கைது செய்தனர்.