/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திட்டங்களில் முதல்வர் பெயர் விளம்பரத்துக்காக அல்ல; நம்பகத்தன்மைக்காக என அமைச்சர் விளக்கம்

ADDED : ஆக 08, 2025 01:09 AM
ஈரோடு, முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு பி.எஸ்.பார்க்கில் உள்ள கருணாநிதி உருவ சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் திட்டங்களுக்கு, முதல்வரின் பெயரை வைத்திருப்பது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. இதுவரை முதல்வராக இருந்தவர்களின் பெயரில், திட்டங்கள் செயல்படுவது விளம்பரத்துக்கானது அல்ல. முதல்வரின் பெயரை குறிப்பிடும்போது, மக்களிடம் அத்திட்டம் சென்றடையும். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும், திரும்பி பார்ப்பார்கள். அது வெற்றி பெறும். அதனால்தான் உச்சநீதிமன்றம், அதை அனுமதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் நுாற்றுக்கணக்கான அரசு மருத்துவமனை பல நிலைகளில் உள்ளன. அதேநேரம் தங்கள் பகுதியில் முகாம் நடப்பதால் விரும்பி சென்று பார்க்கின்றனர். அங்குதான், அவர்களுக்கு சில பிரச்னைகள் இருப்பது தெரியவந்து, தொடர் சிகிச்சை பெறுகின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே, பல பகுதிகளில் முகாம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.
எம்.எல்.ஏ., சந்திரகுமார், முன்னாள்
எம்.பி., கந்தசாமி, நிர்வாகிகள் சச்சிதானந்தம், திண்டல் குமாரசாமி, துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.