/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபைலில் பேசியதை தாய் கண்டித்ததால் மகன் விபரீதம்
/
மொபைலில் பேசியதை தாய் கண்டித்ததால் மகன் விபரீதம்
ADDED : நவ 05, 2024 01:23 AM
மொபைலில் பேசியதை தாய்
கண்டித்ததால் மகன் விபரீதம்
நம்பியூர், நவ. 5---
நம்பியூர், பி.வி.ஆர்.தியேட்டர் ரோடு பகுதியில் வசிப்பவர் போபட் பாபுராவ், 57; ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் நம்பியூருக்கு குடும்பத்துடன் வந்தார். அதே பகுதியில் டெய்லராக கடை நடத்தி வருகிறார். இவரின் மகன் சூரஜ் போபட், 22; கோவையில் உள்ள உறவினர் நகைப்பட்டறையில் வேலை செய்து வந்தார்.
கடந்த, 1-ம் தேதி வீட்டுக்கு வந்தவர் தொடர்ந்து மொபைல்போனில் பேசியபடி இருந்ததால், தாயார் சங்கீதா கண்டித்துள்ளார். இந்நிலையில் மறுநாள் வெளியில் சென்ற சூரஜ், வீடு திரும்பவில்லை. மகன் மாயமானது குறித்து நம்பியூர் போலீசில், தந்தை பாபுராவ் புகாரளித்தார். சிறுவலுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கீழ்பவானி வாய்க்காலில், காவேரிபாலம் என்ற இடத்தில், சூரஜ் போபட் சடலம் நேற்று மிதந்தது. போலீசார் சடலத்தை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மொபைல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால், வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

