/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாலுகா அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரசாயன கழிவு லாரியின் நெடியால் அவதி

ADDED : டிச 09, 2024 07:33 AM
ஈரோடு: ஈரோட்டில் சூளை பாரதி நகரில், ஓடையில் ரசாயன கழிவு கொட்ட வந்த டேங்கர் லாரியை, அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட டேங்கர் லாரி, ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், கடந்த, ௧ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லாரியில் இருந்து அவ்வப்போது ரசாயன கழிவு நெடி பரவுவதாக புகார் எழுந்துள்ளது. ரசாயன கழிவு நீரை அகற்ற மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்காத நிலையில், ரசாயன கழிவு நெடி பரவுவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: ரசாயன கழிவு நெடி அவ்வப்போது வீசுகிறது. இதனால் மூச்சு விட சிரமம் ஏற்படுகிறது. காலை முதல் மாலை வரை பொதுமக்கள், மனு எழுதுபவர்கள், அலுவலக ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் வந்து செல்கின்றனர். லாரியை உடனடியாக எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து ஈரோடு தாசில்தார் முத்து கிருஷ்ணன் கூறும்போது, ''நாளை (இன்று) மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களிடம் பேசி, லாரியை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.