/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சொக்கநாதர் கோவில் நந்தவனத்தில் தொடரும் 'அழிப்பு' முயற்சியால் பகீர்
/
சொக்கநாதர் கோவில் நந்தவனத்தில் தொடரும் 'அழிப்பு' முயற்சியால் பகீர்
சொக்கநாதர் கோவில் நந்தவனத்தில் தொடரும் 'அழிப்பு' முயற்சியால் பகீர்
சொக்கநாதர் கோவில் நந்தவனத்தில் தொடரும் 'அழிப்பு' முயற்சியால் பகீர்
ADDED : நவ 24, 2024 12:53 AM
சொக்கநாதர் கோவில் நந்தவனத்தில்
தொடரும் 'அழிப்பு' முயற்சியால் பகீர்
பவானி, நவ. 24-
அம்மாபேட்டை காவிரிக்கரையில் சொக்கநாதர் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள நந்தவனத்தை அழித்து, கரிய பெருமாள் கோவில் வழியாக ரோடு போட, கடந்த ஆட்சியில் முடிவு செய்தனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நந்தவனத்தில் உள்ள தென்னை மரங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. இதை எதிர்த்து கிருத்திகை வழிபாட்டு குழு அறக்கட்டளை சார்பில், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் நந்தவனம், நந்தவனமாகவே இருக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்படி நந்தவனத்தில் மீண்டும் தென்னை மரங்கள், பூச்செடி வைக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு முன், அமைச்சர் முத்துச்சாமி வளர்ச்சி திட்டப்பணி துவக்க நிகழ்ச்சிக்கு வந்தபோது, தென்னை மரங்கள், பூச்செடியை அழித்து மண் சாலை போட்டனர். இதனால் மீண்டும் நந்தவனத்தில் தென்னங்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, நந்தவனத்தில் இருந்த ஐந்து தென்னங்கன்றுகளை அழிக்க, மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளனர். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் அம்மாபேட்டை போலீசில் புகாரளித்தார். விபரீத விஷம செயலில் ஈடுபட்ட ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.