ADDED : நவ 03, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:தாளவாடிமலையில் இருந்து நேற்று முன்தினம் இரவு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு பிக்-அப் வேன் சென்றது. அப்போது திடீரென ஒற்றை யானை வாகனத்தை வழிமறித்தது. டிரைவர் வேறு வழியின்றி வாகனத்தை நிறுத்தினார். தும்பிக்கையால் தார்ப்பாயை உருவி, தக்காளி ரேக்குகளை கீழே தள்ளியது.
அப்போது சாலையில் சிதறிய தக்காளி பழங்களை ருசித்தது. சிறிது நேரத்தில் அதுவாக செல்ல, டிரைவர் வாகனத்தை ஓட்டி சென்று விட்டார். வழக்கமாக இந்த வழியில், கரும்பு லாரிகளை வழிமறித்து, கரும்பை சுவைப்பதே யானைகளின் வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் யானைகளின் விருப்ப பட்டியலில், தக்காளியும் சேர்ந்து விட்டதாக தெரிகிறது. இதனால் தக்காளி வாகனம் ஓட்டும் டிரைவர்களும், உஷாராகத்தான் செல்ல வேண்டும்.

