/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரும்பில் மாவுப்பூச்சி தாக்குதல்:சோகை உரித்து மருந்து தெளிப்பு
/
கரும்பில் மாவுப்பூச்சி தாக்குதல்:சோகை உரித்து மருந்து தெளிப்பு
கரும்பில் மாவுப்பூச்சி தாக்குதல்:சோகை உரித்து மருந்து தெளிப்பு
கரும்பில் மாவுப்பூச்சி தாக்குதல்:சோகை உரித்து மருந்து தெளிப்பு
ADDED : நவ 03, 2025 02:09 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சென்மலை, அறச்சலுார், சிவகரி உள்ளிட்ட பகுதிகளில், கரும்பு சாகுபடி அதிகம் நடக்கிறது.
இந்நிலையில் அக்ரஹாரம் அருகில் சமயசங்கிலி பகுதியில் கரும்புகளில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்புகளில் சோகை உரித்து மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சமயசங்கிலி பகுதியில், 150 ஏக்கர் பரப்பில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதை தடுக்க மருந்து தெளித்து வருகிறோம். ஆனாலும் கரும்பு பாதிக்கிறது. கரும்பு அறுவடைக்கும் ஆள் கிடைக்காமல், கூலி அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது. இப்போது பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்துக்கு கூடுதல் செலவாகிறது. இவ்வாறு கூறினர்.