/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : நவ 03, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்த கன மழையால் கடந்த மாதம் அக்.,21ல் அணை நீர்மட்டம், 102 அடியை எட்டி, உபரி நீர் திறக்கப்பட்டது.
நேற்று அணை நீர்வரத்து, 5,832 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 102.70 அடி, நீர் இருப்பு, 30.8 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. நீர்வரத்து இதே அளவில் நீடிக்கும் பட்சத்தில், பவானிசாகர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான, 105 அடியை விரைவில் எட்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

