/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லிப்ட் கேட்டு ஏறி காரை கடத்திய ஆசாமி கைது
/
லிப்ட் கேட்டு ஏறி காரை கடத்திய ஆசாமி கைது
ADDED : மார் 05, 2024 01:53 AM
தாராபுரம்;உடுமலையை சேர்ந்தவர் சக்தி பாலன். மாருதி 800 காரில் நேற்று முன்தினம் மூலனுாரை அடுத்த ஒத்த மாந்துறை பகுதி அருகே சென்றார். அப்போது ஒரு ஆசாமி லிப்ட் கேட்டு காரில் ஏறியுள்ளார். அவரும் ஏற்றிக் கொண்ட நிலையில், அவரிடம் கக்தியை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்து மொபைல்போன்களை பறித்துக் கொண்டு, காரையும் ஓட்டிச் சென்றுள்ளான்.
புகாரின்படி வழக்குப்பதிவு செய்த தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார், ஆசாமிக்கு லிப்ட் கொடுத்த இடத்தில் நின்ற ஒரு பைக் மூலம் துப்பு துலக்கினர். அந்த பைக் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திருடி வந்தது என தெரிந்தது.
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீசார், கரூர் ரோட்டில் காரில் சென்ற வழிப்பறி ஆசாமியை மடக்கினர். திண்டுக்கல் மாவட்டம் பழநி, கணக்கன்பட்டியை சேர்ந்த காளியப்பன் மகன் ரவி, 24, என்பது தெரிந்தது. பல இடங்களில் கைவரிசை காட்டிய அவர் மீது, பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

