/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மரவள்ளி கிழங்கு விலை டன் ரூ.6,500 ஆக வீழ்ச்சி
/
மரவள்ளி கிழங்கு விலை டன் ரூ.6,500 ஆக வீழ்ச்சி
ADDED : அக் 10, 2024 02:56 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு டன், 6,500 ரூபாய் என்ற விலையில் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, சிவகிரி, அந்தியூர், தாளவாடி, பர்கூர் உட்பட பல்வேறு மலைப்பகுதி கிராமங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டும், நடப்பாண்டு துவக்கத்திலும் ஒரு டன் மரவள்ளி கிழங்கு, 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது சீசன் இல்லாத நிலை-யிலும், மரவள்ளி கிழங்கு அறுவடை தொடர்ந்து நடந்து வருகி-றது. ஆனால், விலை பாதியை விடவும் குறைந்ததால், விவசா-யிகள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து, தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: மரவள்ளி கிழங்கில் இருந்து எடுக்கப்படும் ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு போன்றவற்றுக்கு எப்-போதும் தேவை அதிகம் உண்டு. தவிர சிப்ஸ் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகைகளிலும் மரவள்ளியை அதிகம் பயன்படுத்துவர். புதுச்சேரி, கேரளாவிலும், தமிழகத்தில் சில இடங்களிலும் மர-வள்ளி கிழங்கை உணவுக்கு பயன்படுத்துகின்றனர். கடந்-தாண்டும், நடப்பாண்டு துவக்கத்திலும் ஒரு டன், 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, 6,500 ரூபாய்க்கு விற்பனை-யானது.
அதேபோல, 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை, 3,800 ரூபாய், 90 கிலோ எடை கொண்ட ஸ்டார்ச் மாவு, 2,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலை இல்லாததால், விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, விவசாயிகள், சேகோ ஆலை நிர்வாகம், அதிகாரிகள் கொண்ட முத்தரப்பு கூட்டம் நடத்தி, ஒரு டன், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறையாத விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.