/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அளவீட்டுக்கு சென்ற அறநிலைய துறையினர் பட்டா கேட்டு புலம்பிய குடியிருப்புவாசிகள்
/
அளவீட்டுக்கு சென்ற அறநிலைய துறையினர் பட்டா கேட்டு புலம்பிய குடியிருப்புவாசிகள்
அளவீட்டுக்கு சென்ற அறநிலைய துறையினர் பட்டா கேட்டு புலம்பிய குடியிருப்புவாசிகள்
அளவீட்டுக்கு சென்ற அறநிலைய துறையினர் பட்டா கேட்டு புலம்பிய குடியிருப்புவாசிகள்
ADDED : அக் 29, 2024 01:04 AM
அளவீட்டுக்கு சென்ற அறநிலைய துறையினர்
பட்டா கேட்டு புலம்பிய குடியிருப்புவாசிகள்
பவானி, அக். 29-
பவானி அருகேயுள்ள பெருமாள்மலை, மங்களகிரிநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அளக்க சென்ற, ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களிடம், பட்டா கேட்டு, குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி அருகே சூரியம்பாளையம் பஞ்., பெருமாள்மலையில், மங்களகிரிநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் அடிவார பகுதியில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில், 75க்கும் மேற்பட்ட இலங்கை சென்று தாயகம் திரும்பிய தமிழ் மக்கள், அருந்ததிய மக்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்புவாசிகள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் எனக்கூறி, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், அவ்விடத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே, 90 சதவீதம் அளவீடு பணி முடிந்த நிலையில், மீதி இடங்களை கணக்கெடுக்க, கோவில் செயல் அலுவலர் கயல்விழி உள்ளிட்ட அலுவலர்கள் நேற்று சென்றனர். அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்புவாசிகள், ஈரோடு-பவானி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சிறிது நேரம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது 'நிலத்துக்கு நாங்கள் வரி செலுத்துகிறோம்; எனவே எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்' என வலியுறுத்தினர்.
இதை கேட்ட அலுவலர்கள், உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறி, அளவீடு செய்யாமல் கிளம்பினர்.