/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த வருவாய்த்துறை
/
வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த வருவாய்த்துறை
வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த வருவாய்த்துறை
வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த வருவாய்த்துறை
ADDED : செப் 30, 2024 12:52 AM
வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியதால்
வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த வருவாய்த்துறை
அந்தியூர், செப். 30-
வெள்ளித்திருப்பூர் அருகே, பர்கூர் மலை அடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால், வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பர்கூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வரட்டுப்பள்ளம் அணையின் மொத்த கொள்ளளவு, 33.46 அடியாகும். கடந்த, 20 நாட்களுக்கு முன்பு, அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கல்லுப்பள்ளம், கும்பரவாணி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. இதனால் அணைக்கு வந்த தண்ணீரால், 25 அடியாக இருந்த நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, 32 அடியை தொட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பர்கூர் மலையின் மேற்கு மலைப் பகுதியான தாளக்கரை சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்தது.
மலைப்பகுதியில் இருந்து வழிந்தோடும் தண்ணீர், வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும், வரட்டுப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம், 63 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதன் காரணமாக, நேற்று அதிகாலை வரட்டுப்பள்ளம் அணையின் முழு கொள்ளளவான, 33 அடியை எட்டியது.
கனமழையால் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு, 67 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து அந்தியூர் மற்றும் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு, 67 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணை நிலவரம் குறித்து, நேற்று காலை அந்தியூர் தாசில்தார் கவியரசு உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும், தண்ணீர் வெளியேறும் தாழ்வான பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார். வி.ஏ.ஓ.,க்கள் சதீஸ்குமார், தமிழ்செல்வி மற்றும் நீர்வளத்துறை பணியாளர்கள்
உடனிருந்தனர்.