/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோடைக்கு முன்பே கொளுத்தும் வெப்பம்
/
கோடைக்கு முன்பே கொளுத்தும் வெப்பம்
ADDED : மார் 07, 2025 07:30 AM
ஈரோடு : தமிழகத்தில் இந்த வாரம், இயல்பை விட வெயில் தாக்கம் கூடுதலாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதற்கேற்ப ஈரோட்டில் இந்தாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று, 38.8 டிகிரி செல்சியஸ் (101 டிகிரி பாரன்ஹீட்) அளவுக்கு வெயில் தாக்கம் இருந்தது. வெயிலின் உக்கிரத்தால் பகலில் நடமாட்டத்தை பெரும்பாலான மக்கள் குறைத்து கொண்டனர். அத்யாவசிய தேவைக்கு சாலைகளில் நடந்து செல்வோர், டூவீலரில் செல்வோர் சிரமத்துக்கு ஆளாகினர்.
தலையில் தொப்பி, துணி, ஹெல்மெட், கண்ணுக்கு கண்ணாடி, கையுறை அணிந்து சென்றனர். மழைக்கு மட்டுமே குடை என்ற கான்செப்ட், வெயிலுக்கும் தான் குடை என்பதை தெரிய வைத்து, பலரை குடைபிடிக்க வைத்துள்ளது. தாகத்தை தீர்த்து கொள்ள ஜூஸ் கடைகளில் குறிப்பாக கரும்பு ஜூஸ் விற்கும் கடைகளில் மக்கள் தஞ்சமடைந்தனர். இளநீர், தர்பூசணி, கம்மங்கூழ், மோர் விற்பனையும் சூடுபிடித்தது. அக்னி நட்சத்திரத்தை போல் காலை, 10:30 மணி முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்க இருந்தது.