/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி கூடுதுறையில் வௌ்ளத்துக்கு தடைபோட்ட ஆகாயத்தாமரை
/
பவானி கூடுதுறையில் வௌ்ளத்துக்கு தடைபோட்ட ஆகாயத்தாமரை
பவானி கூடுதுறையில் வௌ்ளத்துக்கு தடைபோட்ட ஆகாயத்தாமரை
பவானி கூடுதுறையில் வௌ்ளத்துக்கு தடைபோட்ட ஆகாயத்தாமரை
ADDED : ஜூலை 29, 2025 01:21 AM
பவானி, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட, 1 லட்சம் கன அடி உபரி நீரால், பவானியில் கரைகளை தொட்டு காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. இந்நிலையில் பவானி, கந்தன்பட்டறை பகுதிகளில், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று மாலை தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் வசிக்கும், ௫௦க்கும் மேற்பட்டோரை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் மீட்டு, பசுவேஸ்வரர் வீதியில் உள்ள சமுதாய கூடம் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தினர், உணவு, தண்ணீர் வழங்கி வருகின்றனர்.பவானி ஆற்றில் வெள்ளம்
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில், 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆப்பக்கூடல்-பெருந்தலையூர் ஆற்றுப்பாலத்தில், இருகரைகளை தொட்டு பாயும் பவானி ஆற்றை, அவ்வழியே செல்லும் மக்கள் ஆர்வத்துடன், நின்று, ரசித்து செல்கின்றனர்.
ஆகாயத்தாமரையால் சிரமம்
பவானி கூடுதுறை அருகே பவானி ஆற்றில், பச்சை புல்வெளி போல் ஆகாயத்தாமரை பரவி படர்ந்துள்ளது. இந்நிலையில் பவானிசாகர் அணை உபரி நீர் திறப்பால், பவானி ஆற்றில் வெள்ளம் பாய்கிறது. பவானியில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால், தண்ணீர் செல்ல முடியாமல் தேங்க தொடங்கியது. நேரம் செல்ல செல்ல நீர்வரத்து அதிகரித்ததால், ஆகாயத்தாமரை சற்று அடித்துச் செல்லப்பட, அந்த இடைவளியில் பாயும் தண்ணீர், முக்கூடலில் கலந்து காவிரியில் பாய்கிறது.
ஆகாயத்தாமரையால் கூடுதுறை பகுதியில் தண்ணீர் தேங்கியதில், இரண்டாண்டுகளுக்கு முன் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு தடுப்பு உடைந்தது. அந்த நிலை மீண்டும் ஏற்படும் முன், நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கை எடுத்து, பவானி ஆற்றில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்.