ADDED : அக் 29, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் எண்.3ல் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு சென்னை செல்லும் ஏற்காடு அதிவிரைவு ரயில் கிளம்பியது. அப்போது ஓடி வந்த ஒரு இளம்பெண் ரயிலில் ஏற முற்பட்டார். ரயில் வேகமெடுத்ததால் ஏற முடியாமல், ரயில் படிக்கட்டு, பிளாட்பார்ம் இடையே சிக்கி சிறிது துாரம் இழுத்து செல்லப்பட்டார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, கரூர் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஜெகதீஷ் துரிதமாக செயல்பட்டு, இளம்பெண்ணை பிடித்து இழுத்து பிளாட்பார்மில் தள்ளி உயிரை காப்பாற்றினார். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

