ADDED : அக் 29, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆறு செல்கிறது. கடந்த, 18ம் தேதி இரவு கொட்டிய மழையால், 19ம் தேதி சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க, பரிசல் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அதன் பிறகும் வெள்ளப்பெருக்கால் தடை தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று காலை, 2,682 கன அடி உபரிநீருடன் மழைநீர் வெளியேறியதால், பத்தாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.

