ADDED : செப் 03, 2024 03:46 AM
ஈரோடு: சேலம், சாமிநாதபுரம், வைத்தியலிங்கம் வீதியை சேர்ந்த சரவணன் மகன் சரண் ஆனந்த், 24; எம்.பி.ஏ., படித்துவிட்டு, சென்னை மை டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலை செய்தார்.
அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, சேலத்தில் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். ஈரோடு கிளை நிறுவனத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதால், மூலப்பாளையத்தில் பாரதி நகரில் வாடகை வீட்டில் கடந்த, 22 முதல் தங்கி வேலை செய்து வருகிறார். கடந்த, 30ம் தேதி தந்தை சரவணன், மகனை பார்த்து விட்டு சென்றார். ஊருக்கு சென்ற நிலையில், மகனை மொபைல்போனில் தொடர்பு கொண்டார். அவர் அழைப்பை ஏற்காததால், சந்தேகமடைந்து அவரது அறைக்கு திரும்பினார்.அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், 'நான் செல்கிறேன், என்னை யாரும் தேட வேண்டாம். அனைத்துக்கும் நன்றி, இப்படிக்கு சரண் ஆனந்த்' என இருந்தது. இதுகுறித்து சரவணன் புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார், சரண் ஆனந்தை தேடி வருகின்றனர்.