/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'காலிங்கராயன் சிலையை மீண்டும் நிறுவணும்'
/
'காலிங்கராயன் சிலையை மீண்டும் நிறுவணும்'
ADDED : டிச 29, 2025 09:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காலிங்கராயன் சிலையை மீண்டும் நிறுவ, தி.மு.க., சுற்றுசூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வேண்டுகோள் விடுத்-துள்ளார்.
இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கை: ஈரோடு மாவட்டத்தின் அடையாளமான, 13ம் நுாற்றாண்டு நீர் மேலாண்மை மேதை காலிங்கராயன் சிலையை, மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும். இன்றைய விவசாயிகளை முதல்வர் பாதுகாப்பது போல, 700 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகளுக்காக வாழ்ந்த காலிங்கராயன் புகழை போற்றுவது காலத்தின் அவசியம். சாலைப்பணி நிறைவடைந்துள்ள நிலையில், புதுப்பிக்கப்பட்ட சந்திப்பில் காலிங்கராயன் சிலையை முழு அரசு மரியாதையுடன் மீண்டும் நிறுவ வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்-துள்ளார்.

