ADDED : செப் 28, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாய்க்காலில் குளித்த
மாணவன் பலி
ஈரோடு, செப். 28-
ஈரோடு, வீரப்பன்சத்திரம், பாரதி தெருவை சேர்ந்த ஸ்ரீதரின் மகன் யஷ்வந்த், 13; இடையன்காட்டுவலசு மாநகராட்சி உயர்நிலை பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன். கடந்த, 26ம் தேதி காலை காலாண்டு தேர்வெழுதி விட்டு வீட்டுக்கு வந்தவர், நண்பர்களுடன் சேர்ந்து கருங்கல்பாளையம், காளிங்கராயன் வாய்க்காலில் குளித்தார். முழுமையாக நீச்சல் தெரியாததால், தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். பெற்றோர், அப்பகுதியினர் தேடியபோது, சிறிது துாரத்துக்கு அப்பால் யஷ்வந்தை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் சிறுவன் இறந்து விட்டது தெரிந்தது.