/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்சோவில் கைதான ஆசிரியர் பணிநீக்கம்
/
போக்சோவில் கைதான ஆசிரியர் பணிநீக்கம்
ADDED : பிப் 18, 2025 07:24 AM
ஈரோடு: ஈரோட்டில் போக்சோ வழக்கில் கைதான தமிழாசிரியர், பள்-ளியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.
ஈரோடு, கருங்கல்பாளையம், ஜெயகோபால் வீதியை சேர்ந்தவர் அலாவுதீன், 31; ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளி தமிழ் ஆசி-ரியர். பிளஸ் 2 படிக்கும் மாணவனின் சமூக வலைதளத்துக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய புகாரில், கருங்கல்பாளையம் போலீசார் போக்சோவில் கைது செய்து, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
இதை தொடர்ந்து பள்ளி கல்விக்துறை, குழந்தைகள் நல குழு-வினர் தனித்தனியே பள்ளியில் விசாரணை நடத்தினர். இதில் ஒரு மாணவன் புகாரளித்ததாக தெரிகிறது. இதனிடையே தமிழா-சிரியரை பணிநீக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவு-றுத்தப்பட்டது. இதையடுத்து அவரை பள்ளி நிர்வாகம் நிரந்தர பணிநீக்கம் செய்துள்ளதாக, பள்ளி கல்வித் துறையினர் தெரிவித்-தனர்.