ADDED : மே 03, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம் : சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள காட்டுவளவை சேர்ந்தவர் முத்துக்குமார், 33; இவரின் மனைவி இந்திரா.
தம்பதிக்கு குழந்தை இல்லை. டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தோட்டத்தில் தங்கி, மனைவியுடன் கூலி வேலை செய்து வந்தார்.நேற்று மதியம் வீட்டில் இருந்து முத்துக்குமார் வெளியில் கிளம்பினார். அப்போது மயக்கம் வருவதாக மனைவியிடம் கூறவே, இந்திரா வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்குள் மயங்கி விழுந்து விட்டார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்று பங்களாப்புதுார் போலீசார் தெரிவித்தனர்.