ADDED : ஜூலை 23, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு அருகே 46 புதுார், வெள்ளாளபாளையம், காலிங்கராயன் நகரை சேர்ந்த தொழிலாளி கோபி, 55; வெள்ளாளபாளையம் பிரிவு அருகே பஜாஜ் பிளாட்டினா பைக்கில் நேற்று முன்தினம் மாலை சென்றார்.
நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தாலுகா போலீசார் வழக்குப்ப-திவு செய்துள்ளனர்.