/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் இன்று திருக்கல்யாண வைபோகம்
/
சென்னிமலையில் இன்று திருக்கல்யாண வைபோகம்
ADDED : பிப் 10, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை; சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச விழா நடந்து வருகிறது.
இதையொட்டி கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. நாளை தேரோட்டம் நடக்கிறது. விழாவையொட்டி பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. ஏழாம் நாளான நேற்றிரவு கைலயங்கிரி வாகன காட்சி நடந்தது. எட்டாம் நாளான இன்றிரவு வசந்த திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
நாளை அதிகாலை சுவாமிக்கு மகா அபிஷேகத்தை தொடர்ந்து, 6:20 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நான்கு ராஜவீதிகளில் வலம் வரும் திருத்தேர், ௧௨ம் தேதி மாலை நிலை சேர்கிறது. விழா முக்கிய நிகழ்வான மகா தரிசனம் பிப்.,15ல் நடக்கிறது.

