/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிட்டரின் உயிரை பறித்த கிணற்று மேட்டு துாக்கம்
/
பிட்டரின் உயிரை பறித்த கிணற்று மேட்டு துாக்கம்
ADDED : அக் 08, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த குலுக்கபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ், 39; தனியார் நிறுவன பிட்டர். ஊரில் ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்று மேட்டில் படுத்து நேற்று காலை, 11:00 மணியளவில், துாங்கியுள்ளார்.
அப்போது கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்தார். தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி, தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர். 40 அடி ஆழ கிணற்றில், 20 அடிக்கு நீர் இருந்த நிலையில், நீந்த முடியாமல் யுவராஜ் இறந்தது தெரிய வந்தது. அவர் சடலத்தை மீட்டனர். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.