/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நோட்டு, புத்தகம், சீருடைகளை பள்ளிக்கு அனுப்பும் பணி தீவிரம்
/
நோட்டு, புத்தகம், சீருடைகளை பள்ளிக்கு அனுப்பும் பணி தீவிரம்
நோட்டு, புத்தகம், சீருடைகளை பள்ளிக்கு அனுப்பும் பணி தீவிரம்
நோட்டு, புத்தகம், சீருடைகளை பள்ளிக்கு அனுப்பும் பணி தீவிரம்
ADDED : மே 29, 2025 01:23 AM
ஈரோடு, பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் புத்தகம், நோட்டு, சீருடைகளை அனுப்பி வைக்கும் பணி ஈரோட்டில் துவங்கி உள்ளது.
கோடை விடுமுறைக்குபின் பள்ளிகள், ஜூன் 2ல் திறக்கப்பட உள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக நோட்டு, புத்தகங்கள், சீருடைகள் மொத்தமாக ஈரோடு கொல்லம்பாளையம் மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளிக்கு வந்துள்ளது. அங்கு இவை அனைத்தும் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் தேதி நெருங்கிய நிலையில் நோட்டு, புத்தகம், சீருடைகளை அந்தந்த பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் பள்ளிகளுக்கு நோட்டு, புத்தகம், சீருடை
கள் சென்று விடும். பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு புதிய நோட்டு, புத்தகம், சீருடை வழங்கப்படும் என, பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.