/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளர்கள் மறியல்
/
மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளர்கள் மறியல்
மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளர்கள் மறியல்
மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளர்கள் மறியல்
ADDED : செப் 19, 2024 08:09 AM
ஈரோடு: ஈரோட்டில், மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடு-பட்டனர்.
ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, மாட்டு வண்டிகளின் பயன்-பாட்டை குறைக்க வேண்டும் என்றும், மாட்டு வண்டிக்கு பதி-லாக சரக்கு வாகனங்களை வாங்கி இயக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.சரக்கு வாகனங்களை இயக்கினாலும், மூட்டை, பார்சல்களை ஏற்றி இறக்கும் பணிகளில் தாங்களே ஈடுபடுவோம் என்றும், அதற்கு சுமை துாக்கும் தொழிலாளர்கள் இடையூறு செய்யக்கூ-டாது என்று, மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரி க்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு பார்க் ரோட்டில் உள்ள பார்சல் அலுவல-கத்தில், சரக்கு வாகனத்தில் தொழிலாளர்கள் மூட்டைகளை இறக்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள், மோட்டார் வாகனங்களில் உள்ள சரக்கு-களை நாங்கள்தான் இறக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகி-றது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்து, பார்க் ரோட்டில் மாட்டு வண்டிகளை நிறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்கள் கூறுகையில், '12 ஆண்டுகளுக்கும் மேலாக, மாட்டு வண்டிகளுக்கு பதிலாக மோட்டார் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அதிகாரிகள் எங்களிடம் கூறி வருகின்றனர். சரக்கு வாகனங்களில் பார்சல்களை ஏற்றி, இறக்குவதற்கு எங்க-ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம். அதற்கு, மாட்டு வண்டி தொழிலாளர்கள் சரக்கு வாக-னங்களை இயக்கும்போது பார்சல்களை ஏற்றி, இறக்கலாம் என்றும், அதற்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் இடையூறு செய்-யக்கூடாது என்றும் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார். எனவே நாங்கள் சரக்கு வாகனங்களில் பொருட்களை இறக்குவதற்கு சுமை துாக்கும் தொழிலாளர்கள் இடையூறு செய்யக்கூடாது' என்-றனர்.
இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தலாம் என, போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தை, அரை மணி நேரத்துக்கு பின் கைவிட்டனர். அதன்பிறகு போக்குவரத்து சீரா-னது. இருதரப்பினர் இடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி-யபோது, சுமை துாக்கும் தொழிலாளர்கள் தரப்பில், 'மாட்டு வண்-டிகளில் பொருட்களை கொண்டு வந்து இறக்குவதற்கு நாங்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனால், வாகனங்-களில் கொண்டு வரப்படும் பொருட்களையும் அவர்களே இறக்கி கொண்டால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது,' என்-றனர்.அதற்கு போலீசார், இரு தரப்பினரும் பேசி சுமூக தீர்வு காண்ப-தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உங்கள் கோரிக்கைகளை தெரிவித்து பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றனர்.

