/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை விழா நிறைவு
/
ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை விழா நிறைவு
ADDED : ஆக 14, 2025 02:39 AM
ஈரோடு, ஈரோடு, அக்ரஹார வீதியில் உள்ள பாதராஜ மடத்தில் ராகவேந்திர சுவாமிகளின், 354வது ஆராதனை மஹோத்ஸவம் விழா கடந்த, 10ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. பின் நவக்கிரஹம், தன்வந்திரி ஹோமம், ஸ்தோத்திர ஹோமம் நடந்தது. தினந்தோறும் காலையில் நிர்மால்ய விசர்ஜனம், சேவா சங்கல்பம், பாத பூஜை, பல்லக்கு உற்சவம், கனகாபிஷேகம் நடந்தது.
தினமும் மாலை தேவரநாம பஜனை, கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. அதன்படி நேற்று நிறைவு விழாவின் போது, பல்வேறு பூஜைகளுடன் ராகவேந்திர சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. ராகவேந்திரரின் திருவீதி உலா நடந்தது. நுாற்றுக்கணக்காக பக்தர்கள், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ராகவேந்திர சுவாமிகளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.