ADDED : அக் 23, 2026 06:43 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
அருகே புன்னம் காக்காச்சிகரட்டை தினேஷ்குமார், 24; பருவாச்சியில்
'மென்ஸ் பாயிண்ட்' பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை
கடை திறந்தபோது, சிமெண்ட் சீட் மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதை
கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்ததில்
கல்லாப்பெட்டியில் வைத்திருந்த, 16 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது
தெரிந்தது. கடை 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, மர்ம ஆசாமி
கைவரிசையில் ஈடுபட்டது தெரிய வந்தது. புகாரின்படி அந்தியூர்
போலீசார், களவாணியை தேடி வருகின்றனர்.
