ADDED : அக் 23, 2026 06:43 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த அமாசை மனைவி லட்சுமி, 70; நேற்று
முன்தினம் இரவு வீட்டில் குக்கரை கேஸ் அடுப்பில் வைத்து சமைக்க
முயன்றார்.
திடீரென குக்கர் வெடித்ததில் லட்சுமியின் முகம், கை,
கழுத்து, மார்பு, உள்ளிட்ட இடங்களில் சுடுதண்ணீர் பட்டு காயம்
ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு
சேர்க்கப்பட்டார். குக்கரை சரிவர மூடாமலும், மேற்பகுதி அடைப்பை
கவனிக்காமல் சமைக்க முற்பட்டதே விபத்துக்கு காரணம் என,
கருங்கல்பாளையம் போலீசார் தெரிவித்தனர்.
