/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம், ஊதியூரில் ௪ கோவில்களில் திருட்டு
/
காங்கேயம், ஊதியூரில் ௪ கோவில்களில் திருட்டு
ADDED : ஜன 07, 2024 10:54 AM
காங்கேயம்: காங்கேயம் அருகே தாராபுரம் சாலையில், தண்ணீர்பந்தலை அடுத்த பூவாநல்லுார் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஊர் மக்களுக்கு சொந்தமான இந்த கோவிலில் சுப்பிரமணியம், 52, என்பவர் பூஜை செய்து வருகிறார்.
நேற்று காலை, 7:00 மணிக்கு கோவிலுக்கு சென்றபோது, கோவிலின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. சுவாமியின் தங்க மாங்கல்ய பொட்டு திருட்டு போயிருந்தது. இதேபோல் பூவாநல்லுார் காலனி மதுரை வீரன் கோவிலில், உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்படி காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ஊதியூரை அடுத்த கொத்தனுாரில் மகா மாரியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில் உள்ளது. ஊர் மக்களுக்கு சொந்தமான இக்கோவிலில், சிதம்பரம், 55, என்பவர் பூஜை செய்து வருகிறார். நேற்று காலை கோவிலுக்கு சென்றார். கோவிலின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது தலா கால் பவுன் எடையிலான சுவாமியின் இரு தங்க மாங்கல்யத்தை காணவில்லை. இதேபோல் வலசுபாளையம் மாரியம்மன் கோவில் கதவை உடைத்து, சுவாமியின் மாங்கல்ய பொட்டை திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்படி ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.