ADDED : ஆக 04, 2025 08:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, காந்திஜி சாலை, தலைமை தபால் நிலையம் எதிரே, பேன்சி கடை உள்ளது. ஈரோடு, நாடார்மேடு, விநாயகர் கோவில் வீதி சக்திவேல் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார். நேற்று காலை கடை திறக்க வந்தார். அப்போது கடை ஷட்டர் நெம்பி திறக்கப்பட்டிருந்தது. கடையில் வைத்திருந்த, 32 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது.
கடைக்குள், கடைக்கு வெளியே 'சிசிடிவி' கேமராக்கள் உள்ளன. இவற்றை ஆதாரமாக கொண்டு போலீசார், களவாணியை தேடி வருகின்றனர்.