/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.10 லட்சம் மதிப்புள்ள 58 மொபைல்போன் திருட்டு
/
ரூ.10 லட்சம் மதிப்புள்ள 58 மொபைல்போன் திருட்டு
ADDED : மே 29, 2024 07:17 AM
ஈரோடு : ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே, சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் உள்ளது. திருப்பூரை சேர்ந்த வினோத் குமார், 31, மேலாளராக உள்ளார். நேற்று காலை கடையை திறந்தார். அப்போது கடையில் இருந்த, 58 மொபைல் போன் காணாமல் போனது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்தவர் கடையை பார்த்தபோது, கடையின் பின்புறம் தகர ஷீட் ஸ்க்ரூவை கழற்றி கடைக்குள் புகுந்து கைவரிசை காட்டியதகு தெரிய வந்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசில் புகாரளித்தார். திருட்டு போன மொபைல் போன்களின் மதிப்பு, ௧0 லட்சம் ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.கைரேகை நிபுணர்கள் கடையில் பதிவான ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். கடையில் 'சிசிடிவி' கேமரா உள்ளது. அதில் காட்சிகள் ஏதும் பதிவாகவில்லை. நள்ளிரவில் திருட்டு நடத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.