/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நா.த.க., உட்பட சுயேட்சைகளின் முகவர்கள் குறைவு
/
நா.த.க., உட்பட சுயேட்சைகளின் முகவர்கள் குறைவு
ADDED : பிப் 06, 2025 05:59 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., தவிர, நா.த.க., உட்பட சுயேட்சைகள் சார்பில், 237
ஓட்டுச்சாவடியில் முகவர்கள் இன்றியும், வாக்காளர்களை வழிகாட்டுவதற்கான
'பூத்'களையும் அமைக்கவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று, 237 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுச்சாவடிக்கு, 200 மீட்டருக்கு அப்பால், அனைத்து இடங்களிலும் தி.மு.க.,வினர் 'பூத் சிலிப்' வழங்கி வாக்காளரை வழிகாட்டும் 'பூத்'கள் அமைத்திருந்தனர். தி.மு.க., சின்னம் இன்றி அச்சிடப்பட்டிருந்த 'பூத் சிலிப்'களை வழங்கி வாக்காளர்களுக்கு வழிகாட்டினர். ஆனால் சில இடங்களில் மட்டுமே, நா.த.க.,வினர் 'பூத்' அமைத்திருந்தனர்.
அதேபோல, ஓட்டுச்சாவடிகளில் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர், ஒரு மாற்று முகவர் என பாஸ் வழங்கி, உள்ளே அமரலாம். முகவரை மாற்றி அனுப்பி, சாப்பிட அனுமதிப்பது, இயற்கை உபாதை நேரங்களில் மாற்று முகவர் செயல்படுவார். நேற்று, 237 பூத்களிலும் தி.மு.க., முகவருடன், வேறு சில சுயேட்சை வேட்பாளர்களுக்கான பூத் முகவர் பணியை, தி.மு.க.,வினர் 'அனுமதி கடிதம்' பெற்று செயல்பட்டனர். ஆனால், நா.த.க., சார்பில் மிகச்சில பூத்களில் முகவர்கள் முழுமையாக இருந்தனர். பல பூத்களில் இவர்களுக்கும், சுயேட்சைகளுக்கும் முகவர்கள் குறைந்த நேரமும், இல்லாத நிலையும் இருந்தது. இதனால், தவறான வாக்காளர் வந்தால் கூட, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆட்கள் இல்லை. தி.மு.க., முகவர்கள் கூறியதே ஏற்கப்பட்டது. இதனால், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், வளையக்கார வீதியிலும் இரு வாக்காளர்களின் ஓட்டை, வேறு நபர்கள் பதிவிட்டு சென்றதை காண முடிந்தது.