/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ்சுக்கு வழிவிடாமல் சென்ற போதை ஆசாமியால் பரபரப்பு
/
பஸ்சுக்கு வழிவிடாமல் சென்ற போதை ஆசாமியால் பரபரப்பு
பஸ்சுக்கு வழிவிடாமல் சென்ற போதை ஆசாமியால் பரபரப்பு
பஸ்சுக்கு வழிவிடாமல் சென்ற போதை ஆசாமியால் பரபரப்பு
ADDED : ஆக 22, 2024 03:42 AM
ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, நேற்று காலை பயணிகளுடன் பெருந்துறை நோக்கி பெருந்துறை சாலையில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் முன்புறம் ஹீரோ பைக்கில் வந்த போதை நபர், சாலையில் அங்குமிங்குமாக பஸ்சுக்கு வழி விடாமல் சென்றுள்ளார்.
டிரைவர் பலமுறை ஹாரன் அடித்தும் வழிவிடவில்லை. அரை கி.மீ., துாரம் வரை பஸ் டிரைவரும் வேறு வழியின்றி பைக்கை பின் தொடர்ந்து சென்றார். வீரப்பம்பாளையம் பிரிவு அருகே வந்த போது, பைக்கை ஓவர் டேக் செய்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பஸ்சில் இருந்து இறங்கிய டிரைவர், கண்டக்டர் மட்டுமின்றி பயணிகளும் போதை ஆசாமியை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அவருக்கு அறிவுரை வழங்கி, சாலையோரம் நிற்க செய்தனர். அதன் பின் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.