/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பழங்குடியினர் நிலத்தை பிறர் வாங்க தடை தேவை'
/
'பழங்குடியினர் நிலத்தை பிறர் வாங்க தடை தேவை'
ADDED : ஜூன் 08, 2025 02:48 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் ஒருங்கிணைப்பாளர், வி.பி.குணசேகரன் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியதாவது:
ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளில் விவசாயம் செய்து வாழும் பழங்குடி மக்களின் நிலத்தை பிறர் வாங்குவதை தடை செய்யும் சட்டத்தை, தமிழக அரசு கொண்டு வர வேண்டும். காலம் காலமாக, மலைகளில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்கள் நிலமற்றவர்களாக மாற்றப்படுவது, சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
பழங்குடிகளிடம் நிலத்தை வாங்கி வைத்துள்ளவர்கள், நிலமாற்றம் செய்த நிலங்களை மீட்டெடுத்து பழங்குடி மக்களுக்கு வழங்க வேண்டும்.மேலும், 100 நாள் வேலை வாய்ப்பை மலை வாழ் பெண்களுக்கு வழங்கி, அன்னிய தாவரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.