/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'காய்ந்த பயிருக்கு உரிய நிவாரணமில்லை; சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சமா?'

ADDED : ஜூன் 29, 2024 02:45 AM
ஈரோடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம், ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் செய்தனர். கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம், தெற்கு மாவட்ட செயலாளர் முத்துவேல் என்ற மோகன், சக்தி, ஒருங்கிணைப்பாளர் ரவி, சண்முகம் உட்பட பலர் பேசினர்.
தமிழகத்தில் தென்னம்பால், பனம்பால் என அழைக்கப்படும் கள்ளை இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். கள்ளை இறக்கி விற்க, தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். பக்கத்தில் உள்ள புதுச்சேரி, கேரளா உட்பட பல மாநிலங்களில் கள் முழுமையாக இறக்கி விற்கப்படுகிறது. அதுபோல தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும். யானை மிதித்து கொன்று மலைவாழ் மக்கள், விவசாயிகள் இறந்தால், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் தரப்படுகிறது. அதேசமயம் காய்ந்த பயிர், மழையின்றி அழியும் பயிருக்கு நிவாரணம் தருவதில்லை.
ஆனால், கள்ளச்சாராயம் குடித்து இறந்தால், 10 லட்சம் ரூபாய் தருவதை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.