/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகரவை மேல்நிலை பள்ளியில் தமிழ், ஆங்கில ஆசிரியர் இல்லை
/
நகரவை மேல்நிலை பள்ளியில் தமிழ், ஆங்கில ஆசிரியர் இல்லை
நகரவை மேல்நிலை பள்ளியில் தமிழ், ஆங்கில ஆசிரியர் இல்லை
நகரவை மேல்நிலை பள்ளியில் தமிழ், ஆங்கில ஆசிரியர் இல்லை
ADDED : ஜூன் 10, 2025 01:25 AM
ஈரோடு, ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே காலனி நகரவை மேல்நிலை பள்ளியில், 2024 ஜூலை முதல் பொருளியல் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இந்தப்பிரிவில் நடப்பாண்டு, 154 மாணவ, மாணவியர் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கின்றனர். இதேபோல் முதுகலை தமிழ், ஆங்கில ஆசிரியர்கள் தலா ஒருவர் மட்டுமே உள்ளனர். பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2ல், 250 மாணவ, மாணவியர் உள்ளனர். 1:30 என்ற அளவில் ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் இருக்க வேண்டும்.
இதன்படி தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு எட்டு ஆசிரியர்களும், பொருளியல் பிரிவுக்கு குறைந்த பட்சம் நான்கு ஆசிரியர்களும் இருக்க வேண்டும். ஆனால் கல்வியாண்டு துவங்கி ஒரு வாரம் முடிவற்ற நிலையில் ஆசிரியர்கள் இல்லாதது, பெற்றோர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுபற்றி பெற்றோர்கள் கூறியதாவது: பள்ளி கல்வித்துறை சிறப்பு கவனம் செலுத்தி, போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு பெற்றோர்கள் கூறினர்.