/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இட ஒதுக்கீட்டை எடுத்து கொடுக்கின்றனர்; சீமான்
/
இட ஒதுக்கீட்டை எடுத்து கொடுக்கின்றனர்; சீமான்
ADDED : பிப் 04, 2025 05:49 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வேட்பாளர் சீதாலட்-சுமியை ஆதரித்து, கடைசிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் நேற்று பேசியதாவது:
அவர்கள் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கின்றனர். நாம் இனத்தை நம்பி நிற்கிறோம். மக்களை நம்பி தேர்தலில் தோற்று அடைந்த துன்பம், துயரம், வலிகள் அதிகம். பெண்களுக்கு 33 சத-விகித இட ஒதுக்கீட்டை இப்போது
தான் நிறைவேற்றி இருக்கின்-றனர். கட்சியில் பெண்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டை அளித்த கட்சிகள் ஏதாவது
இருக்கிறதா? தமிழகத்தில் எஸ்.டி., பிரிவு மக்கள் ஜாதி சான்று பெற போராடி வருகின்றனர். சமூக நீதியை பற்றி
பேசும் அரசியல் கட்சியினர் என்ன செய்தார்கள்? தமிழ-கத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இட ஒதுக்கீட்டை எடுத்து கொடுக்க வேண்டும். ஆனால், நீங்கள் எண்ணி கொடுக்கிறீர்கள். இடப்பகிர்வு செய்ய
வேண்டும். பீஹார், தெலுங்கானாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி உள்-ளனர். உங்களால் ஏன்
முடியவில்லை. ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நடுக்கம் வர காரணம் என்ன? இலவசங்களாக
எல்லாவற்-றையும் கொடுக்கும் அரசு தண்ணீரை கொடுக்க முடியவில்லை. இங்குள்ளவர்கள் தலைவர்கள்
அல்ல. தரகர்கள். ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை. பிறகு எதற்கு, 5,000 ஏக்கரில் விமான நிலையம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் உங்களை பார்க்க முதல்வர், துணை முதல்வர் ஏன் வரவில்லை. அவ்வளவு தான்
உங்கள் மதிப்பு. நானும் மற்ற அரசியல் கட்சியினரை போன்று சீட், நோட்டு வாங்கி வாழ முடியாதா?. இது
மாற்றத்துக்கான துவக்கமாக இருக்க வேண்டும். இது கருத்தியலுக்கான போட்டி-யாகும். இவ்வாறு பேசினார்.

