/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திம்மராய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
/
திம்மராய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
திம்மராய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
திம்மராய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED : செப் 09, 2024 06:37 AM
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அடுத்த, கீழ்முடுதுறையில் திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. திருப்பணிகள் நடந்து வந்த நிலையில், கும்பாபிஷேக விழா நேற்று காலை 8:30 மணியளவில் நடைபெற்றது.
முன்னதாக விக்னேஸ்வர பூஜை, முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் துவங்கி தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை மேளதாளங்கள் முழங்க, தீர்த்தக்குடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது.பின், வேத மந்திரங்கள் முழங்க விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் திம்மராய பெருமாள், பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலை சுற்றிலும் திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.