/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருக்கல்யாண உற்சவம் பச்சமலையில் கோலாகலம்
/
திருக்கல்யாண உற்சவம் பச்சமலையில் கோலாகலம்
ADDED : மார் 25, 2024 07:09 AM
கோபி : கோபி பச்சமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த, 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை சண்முகருக்கு சிவப்பு சாற்றி உற்சவம் நடந்தது. இதை தொடர்ந்து சண்முகர், சத்யோஜாத முகத்தில் நடராஜராகவும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதன் பிறகு கல்யாண சுப்ரமணியர், திருக்கல்யாண உற்சவ கோலத்தில் காட்சியாளித்தார். இதனால் பச்சமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் களை கட்டியது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
* கோபி அருகே காசிபாளையத்தில், சிவகிரி முத்து வேலாயுதசாமி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது. காசிபாளையத்தை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட பக்தர்கள், பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம் மற்றும் காவடியுடன் ஊர்வலமாக கோவிலுக்கு நேற்று காலை வந்தனர். பின் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

