/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆதிநாராயண பெருமாளுக்கு திருக்கல்யாணம்
/
ஆதிநாராயண பெருமாளுக்கு திருக்கல்யாணம்
ADDED : அக் 14, 2024 05:11 AM
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த மேலப்பாளையத்தில் உள்ள ஆதிநாரா-யணப் பெருமாள் கோவிலில், நடப்பாண்டு புரட்டாசி விழாவை-யொட்டி அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம், பெருமாள் பஜனை வழிபாட்டு மன்றங்கள் சார்பாக, ஆதிநாரயண பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
இதை-யொட்டி கோவிலில் காலை, 8:௦௦ மணி முதல் மதியம் வரை கலச பூஜை, மகா சுதர்சன ஹோமம், மகா பூர்ணாகுதி, சிறப்பு அபிசேகம், மஹா தீபாராதனை நடந்தது.
மாலையில் கைலாசநாதர் கோவிலில் இருந்து பெண்கள் சீர்வ-ரிசை எடுத்துக்கொண்டு நான்கு ராஜவீதிகள் வழியாக வந்தனர். அங்கு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது.
பின் அலர்மேலு மங்கை நாச்சியார் அம்மை சமேத ஆதிநாரா-யணப் பெருமாள் சுவாமிக்கு, வண்ண மலர்களால் சிறப்பு அலங்-காரம் செய்தனர். பின் திருக்கல்யாண வைபவ உற்சவம் கோலாக-லமாக நடந்தேறியது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பட்டாச்-சார்யார் ஜெயராமர் நடத்தி வைத்தார். இதை தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள்
பங்கேற்றனர்.
இதேபோல் வெள்ளோட்டை அடுத்த உலகபுரம் புதுார், முத்-தையன் வலசில் பழமையான வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்து. இதில் நுாற்றுக்கணக்-கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.