/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவன் கோவில்களில் களை கட்டிய சிவராத்திரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

ADDED : மார் 09, 2024 12:48 AM
ஈரோடு, சிவராத்திரியை ஒட்டி சிவன் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இரவு முழுவதும் சிறப்பு பூஜை நடந்ததால், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
சிவராத்திரி விழாவையொட்டி ஈரோடு கோட்டை, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை, 5:00 மணிக்கு மேல் சிறப்பு அபிேஷகம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு, 9:00 மணி உட்பட, 4 நேரம் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தனர். கோவிலுக்கு வெளியே இசை, நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரவு முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
டி.வி.எஸ்., வீதி மகிமாலீஸ்வரர் கோவிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு முழுவதும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர். இதனால் கோட்டை, மீனாட்சிசுந்தரனார் சாலை, டி.வி.எஸ்., வீதி உட்பட பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.