/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா கோலா-கலம் விடிய விடிய காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
/
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா கோலா-கலம் விடிய விடிய காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா கோலா-கலம் விடிய விடிய காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா கோலா-கலம் விடிய விடிய காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜன 11, 2025 02:34 AM
ஈரோடு: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஈரோடு கஸ்துாரி அரங்க-நாதர் கோவில் உள்பட, மாநகர் மற்றும் மாவட்டத்தில், பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் வழியாக எழுந்தருளிய எம்பெருமானை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்-தனர்.
ஈரோடு கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிச., 31ல் துவங்கியது. அன்று பத்து உற்சவம் துவங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது. நேற்று முன்தினம் மாலை, கஸ்துாரி அரங்கநாதர், மோகினி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை, 3:00 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி பாடப்பட்டது. பின் உற்சவருக்கு பல்வேறு திரவியங்களால் திருமஞ்சனம் நடை-பெற்றது. பின் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்துாரி அரங்கநாத பெருமாளுக்கு தீபா-ராதனை நடந்தது. காலை, 5:00 மணிக்கு பரமபத வாசல் எனப்-படும் சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டது. சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்துாரி அரங்கநாதரை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு பரமபத வாசல் வழியாக கடந்தனர். அப்போது 'கோவிந்தா, கோவிந்தா; கோவிந்தா, கோபாலா' என்று கோஷம் எழுப்பியபடி சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்-தர்கள், இரவு, 1:00 மணி முதல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து, பரமபத வாசல் வழியாக வந்தனர். பக்தர்களுக்கு துளசி, துளசி தீர்த்தம், லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்கள், சேவை அமைப்புகள் சார்பில், கோவில் அருகே பிரசாதங்கள் வழங்கினர். நேற்று முதல் வரும், 20ம் தேதி வரை ராப்பத்து உற்-சவம் நிகழ்ச்சியுடன், முத்தங்கி சேவை நடக்கிறது. வரும், 21ம் தேதி இரவு, 7:00 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம், திருவாசல் சாற்றுமுறையுடன் விழா நிறைவடைகிறது.
* சென்னிமலையை அடுத்த மேலப்பாளையம், ஆதிநாராயண பெருமாள் கோவிலில் அதிகாலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின் சொர்க்கவாசல் வழியாக உற்சவரை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் முருங்கத்தொ-ழுவு கிராமம் வடுகபாளையம் அருகே அணிரங்க பெருமாள் கோவில், சென்னிமலை ஏகாந்த வெங்கடேசபெருமாள் கோவிலில், வெள்ளோட்டை அடுத்த ஆளவாய் தண்ணீர் பந்தல் கிருஷ்ண பெருமாள் கோவிலிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
* அம்மாபேட்டை அருகே பூனாச்சி சமயதாரனுார் கரிய பெருமாள் கோவிலில் ஏகாதசி பெருவிழா கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி-ஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை, ௫:௦௦ மணியளவில் பரம-வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்த பெருமாளை கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். இதேபோல் பவானி சங்கமேஸ்வரர் கோவில் பெருமாள் சன்ன-தியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடநத்து.
* டி.என்.பாளையம் அருகே பெருமுகை திருப்பதி திருமலை சஞ்சீவிராய பெருமாள் உக்கிர நரசிம்மர் கோவிலில் அதிகாலை, 4:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து மகாதிருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு, கிரிவலம் நடந்தது. டி.என்.பாளையத்தை அடுத்த கணக்கம்பாளையத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இதையொட்டி அருகில் உள்ள திருக்குளத்தில் பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி, 50 ஆண்டு-களுக்குப் பிறகு நடந்தது. இதன் பிறகு காலை, 7:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதேபோல் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில், சத்தி வேணுகோபால சுவாமி கோவில், பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி ஈஸ்வரன் கோவில், கோபி பச்சை-மலை மரகத வெங்கடேச பெருமாள் கோவில், பெருந்துறை பிர-சன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில், பெருந்துறை கரியமா-ணிக்க பெருமாள் கோவில், கொடுமுடி வீரநாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.