/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பழனிக்கு பாத யாத்திரையாக சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்
/
பழனிக்கு பாத யாத்திரையாக சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்
பழனிக்கு பாத யாத்திரையாக சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்
பழனிக்கு பாத யாத்திரையாக சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ADDED : ஜன 16, 2025 06:28 AM
ஈரோடு: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு காவடி சுமந்தும், பாதயாத்திரையாகவும் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசம் பிப்.,11ல் கொண்டாடப்படுகிறது. தொடர் விடுமுறையை பயன்படுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக சென்றபடி உள்ளனர். குறிப்பாக பள்ளிபாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் பழனிக்கு சென்று முருகனை வழிபட பாதயாத்திரையாக செல்கின்றனர்.
நேற்று வழக்கத்துக்கு மாறாக, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மயில் காவடி, சந்தன காவடிகளை சுமந்தபடி பக்தர்கள் சென்றனர். கருங்கல்பாளையம் காவேரி சாலை, ஆர்.கே.வி சாலை, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு, மூலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வழி நெடுக பொதுமக்கள், தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் அன்னதானம், மோர், தண்ணீர் பாட்டில், பிஸ்கட், பழங்கள், ஜூஸ் உள்ளிட்டவற்றை வழங்கினர். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, ஆங்காங்கே வாகன நெரிசலை சரி செய்யும் பணியை போலீசார் மேற்கொண்டனர்.