/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானியில் நடந்த சுவாமி ஊர்வலம் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்
/
பவானியில் நடந்த சுவாமி ஊர்வலம் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்
பவானியில் நடந்த சுவாமி ஊர்வலம் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்
பவானியில் நடந்த சுவாமி ஊர்வலம் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்
ADDED : மார் 17, 2025 04:00 AM
பவானி: பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் மாசி மாதத்தில் வெகு விமரிசையாக விழா நடக்-கிறது. இந்த வகையில் நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த வாரம் வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. இதை தொடர்ந்து சேறு பூசும் நிகழ்வு நடந்தது. நேற்று முன்தினம் இரவில் தொடங்கி அதிகாலை வரை, சுவாமி ஊர்வலம் நடந்தது. இதை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.
பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அந்தியூர் பிரிவு, வி.என்.சி., கார்னர் உட்பட கோவில் வளாகம் வரை, பெருமாள், முருகன், விநாயகர், மாரியம்மன், சிவன் ஆகிய சுவாமிகளின் உருவங்களை மின் விளக்குகளால் அலங்கரித்து ஊர்
வலமாக கொண்டு சென்றனர். பவானி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், அந்தியூர் பிரிவில் இருந்து கோவில் வளாகம் வரை, குடும்பத்தினர், நண்பர்களுடன் ஆர்வத்துடன் பார்வையிட்-டனர். அதிகாலையில் ஊர்வலம் முடிந்த நிலையில், செல்லியாண்-டியம்மனை தரிசனம் செய்தனர். பிறகு கோவிலை ஒட்டி அமைக்-கப்பட்டிருந்த பல்வேறு கடைகளில், திருவிழா நினைவாக பொருட்களை வாங்கிக்கொண்டு, மகிழ்ச்சியுடன் வீடு திரும்-பினர்.