/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவிலை இடிப்பதாக மிரட்டல்: மாநகர தி.மு.க., நிர்வாகி மீது புகார்
/
கோவிலை இடிப்பதாக மிரட்டல்: மாநகர தி.மு.க., நிர்வாகி மீது புகார்
கோவிலை இடிப்பதாக மிரட்டல்: மாநகர தி.மு.க., நிர்வாகி மீது புகார்
கோவிலை இடிப்பதாக மிரட்டல்: மாநகர தி.மு.க., நிர்வாகி மீது புகார்
ADDED : மார் 05, 2025 06:15 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி ஒன்பதாவது வார்டு கிருஷ்ணா நகர், குபேரன் நகர், ஆறுபடையான் நகர், அடுக்குபாறை பகுதியை சேர்ந்த மக்கள், வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று வந்து, இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:அடுக்குபாறையில் சின்ன மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் இருந்து சிறிது துாரத்தில் புதிதாக வீடு கட்டி குடியிருந்து வரும், ஈரோடு மாநகர் நெசவாளரணி துணை அமைப்பாளர் சண்முகம், கோவிலில் தினசரி மைக் செட் ரேடியோ பாடுகிறது. கோவிலில் யாரும் வழிபாடு செய்ய கூடாது என்கிறார். கோவிலை இடித்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார்.
அங்குள்ள வாய்க்கால் புறம்போக்கு நிலத்தை அவர் ஆக்ரமித்துள்ளார். ஆக்கிரமிப்பு நிலத்தின் அருகே செல்லும் மக்களை தகாத வார்த்தையால் திட்டுகிறார். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்ற இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபு, சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். சண்முகத்தை விசாரணைக்காக, ஸ்டேஷனுக்கு வர வேண்டும் எனவும் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.